செய்திகள்நிகழ்வுகள்

கொட்டக்கலை வெலிங்டன் தோட்ட பகுதியில் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு ..

மலையகம் மக்கள் ஒன்றியத்தின் (UK) உப தலைவரான கணபதிப்பிள்ளை மகேந்திரன் அவர்களின் அனுசரணையில் கொட்டக்கலை வெலிங்டன் தோட்ட பகுதியில் வசிக்கும் வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு கடந்த புதன்கிழமை (2021-07-15) காலை 10 மணிக்கு வெலிங்டன் தமிழ் வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் திரு ,திருமதி மஞ்சுல சுமந்த சில்வா ஒருங்கிணைபில் இடம்பெற்றது.

இன் நிகழ்வானது சுகாதார வழிமுறைகளுடன் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கலந்துக்கொண்ட வெலிங்டன் தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் மலையகம் மக்கள் ஒன்றியத்தினால் பாடசாலைக்கு மாணவர்களின் நலன் கருதி செய்த சேவைகளை நினைவுகூர்ந்து பாராட்டினார்.

மேலும் உலர் உணவு பொதிகளைப் பெற்றுக்கொணடவர்கள் தங்களது நன்றிகளை நிகழ்வின் போது தெரிவித்தனர்.

பிரியா

Related Articles

Back to top button