செய்திகள்

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒருவர் கைது.

கொழும்பு ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மதிவானன் எனும் இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கடுவெல, ஹேவாகம பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், பயன்படுத்தப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகளும் மோட்டார் சைக்கிள்களும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த 8 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Articles

Back to top button