செய்திகள்நுவரெலியாமலையகம்

கொட்டியாகலை கீழ்ப்பிரிவு தோட்டம், மாட்டுவாகல தோட்டத்தின் மேற்பிரிவு முடக்கம்

நாட்டில் மேலும் 04 மாவட்டங்களில் 05 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6.00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி, கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 05 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் கிரியெல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாட்டுவாகல தோட்டத்தின் மேற்பிரிவும், கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெந்தளை வடக்கு கிராம சேவகர் பிரிவின் ஓலந்த கிராமம் மற்றும் கொழும்பு மாவட்டத்தின் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒபேசேகரபுர (514சீ) கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் நுவரெலியா மாவட்டத்தி பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டத்தின்கீழ் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறே, கம்பஹா மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த 3 கிராம சேவகர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விபரம் வருமாறு,

Related Articles

Back to top button