கொத்தமலை, வலப்பனை, நுவரெலியா ஆகிய பிரதேசங்களில் கொரோனா விழிப்புணர்வு கருத்தரங்கு!

uthavum karangal

யூ.ன் ஹெபிடாட் நிறுவனம் நடைமுறைப்படுத்தும் கோவிட் 19  தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்தல் எனும் செயற்திட்டதின் கீழ் பெருந்தோட்டத்தில் வசிக்கும் தோட்ட அமைப்புக்களின் தலைவர்களை விழிப்புணர்வு செய்யும் கருத்தரங்கு நுவரெலியா மாவட்டத்தில் உள்ள கொத்தமலை, வலப்பனை, நுவரெலியா ஆகிய பிரதேச செயலகப்பிரிவில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பெருந்தோட்டங்களில் நடைபெற்றது.

இதற்கு வளவளராகாக மாவட்ட சுகதார கல்வி உத்தியோகத்தர் நயனி விஐய விக்கிரம கலந்து கொண்டு கருத்தரங்கினை வழிநடாத்தினார்.

கொரானா தொற்று எற்படுதவதற்கு முன்னர் செய்து கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் கொரானாவினால் ஏற்படும் தாக்கம் பற்றியும் விளக்கி கூறினார் இக்கருத்தரங்கானது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கான நிதியுதவிவினை கொரியசர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

எம். எச். ஆஸாத் – பாலமுனை

தொடர்புடைய செய்திகள்