செய்திகள்மலையகம்

கொத்தமலை வீதியில் திடீரென தோன்றிய பாரிய குழி

கொத்தமலை நீர்தேக்கத்துக்கு அண்மித்த வீதியில் திடீரென பாரிய குழியொன்று நேற்றிரவு ஏற்பட்டுள்ளது. கடும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையிலேயே மேற்படி அனர்த்தமும் இடம்பெற்றுள்ளது. இதனால் குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்று காலை சம்பவ இடத்துக்குசென்ற பொறியியளாலர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கான காரணத்தை கண்டறிவதற்கான ஆய்வுகளும் இடம்பெற்றுவருகின்றன.

நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்படும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம்.

Image

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com