செய்திகள்

:கொத்தலாவ சட்டத்தினை உடன் கிழித்தெறி”

கொத்தலாவ சட்டத்தினை உடன் கிழித்தெறி என்ற தமிழில் மற்றும் சிங்களமொழியில் எழுதப்பட்ட வாசகங்களை தாங்கியவாறு, கேப்பாபுலவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்திற்கு எதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு 08 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 33 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்படட நிலையில், இவர்களில் தேரர்கள் இருவர் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 11 பேர் கேப்பாபுலவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Back to top button