செய்திகள்

கொத்மலை உட்பட சில பகுதிகள் இன்று காலை முதல் விடுவிப்பு

கொரோனா பரவல் காரணமாக நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. அந்த வகையில் சில கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் பொலிஸ் பிரிவுகளில் இன்று காலை முதல் தனிமைப்படுத்தல் செயற்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவின் பனன்கம்மன கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் பொலிஸ் பிரிவின் குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாம்பமுணுவ, கொறக்காபிட்டிய, மாவித்தார வடக்கு, பெலென்வத்தை மேற்கு, பெலென்வத்தை கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மொரட்டுமுல்லை பொலிஸ் பிரிவின் வில்லோரவத்தை மற்றும் மஹரகம பொலிஸ் பிரிவின் அரவ்வல, பமுனுவ கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கம்பஹா மாவட்டத்தின் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்தளை 473 கிராம சேவகர் பிரிவில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளது.

மேலும் கட்டான பொலிஸ் பிரிவின் KC சில்வாபுர, கதிரான வடக்கு கிராமத்தின் அட்டபகஹவத்தை பிரிவு, கதிரான தெற்கு கிராம சேவகர் பிரிவின் பேசகர்ம பிரிவு ஆகியன விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மஹர பொலிஸ் பிரிவின் எல்தெனிய கிழக்கு, சூரியபாலுவ தெற்கு, சூரியபாலுவ வடக்கு, கீழ் கரகஹமுண வடக்கு, மேல் கரகஹமுன வடக்கு ஆகிய பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com