செய்திகள்மலையகம்

கொத்மலை நீர் தேக்கத்தை அண்டிய பாதையில் மீண்டும் வாகன போக்குவரத்து

தாழிறங்கிய கொத்மலை நீர் தேக்கத்தை அண்டிய பாதை புனரமைக்கப்பட்டு மீண்டும் வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் திகதி இந்த பாதை தாழிறங்கியது.

பாதையின் உட்பகுதியில் நீர் வழிந்து ஓடுவதற்கான குழாயில் ஏற்பட்ட வெடிப்பே இதற்கான காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மகாவலி அதிகார சபையின் முழுமையான ஒத்துழைப்புடன் பொறியியல் பணிகளுக்கான மத்திய ஆலோசனை பணியகம் இந்த பாதையை சுமார் 25 மில்லியன் ரூபா செலவில் புனரமைத்துள்ளது.

Related Articles

Back to top button