செய்திகள்

கொரியாவினால் இலங்கைக்கு கடன்.

(ராகவ்)

500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு சலுகைக் கடனாக வழங்க கொரிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி- இறக்குமதி வங்கியின், பொருளாதார அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக இந்த கடன் தொகையை கொரிய அரசாங்கம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கடன் வட்டி விகிதம் 0.15% -0.20% வரை குறைவாகவும், கடனுக்கு 10 ஆண்டுகள் சலுகை காலமும், சுமார் 40 ஆண்டுகள் சலுகை காலமும் இந்த கடனுக்காக கொரிய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ளன.

Related Articles

Back to top button