செய்திகள்

கொரோனாத் தொற்றுக்கு இலக்கான இந்திய ஆணழகன் – வறுமையில் வாடிய சோகம்

(மாதுருபாகன் ராகவ்)

தொற்றுக்குள்ளான நிலையில் ஒட்சிசன் துணையுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவர்
நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் மும்பையை சேர்ந்த 34 வயதான ஒரு குழந்தையின் தந்தையான ஜகதீஷ் லாட்
கொரோனாத் தொற்றால் உயிரிழந்தமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அகில இந்திய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ள ஜகதீஷ் லாட் , உலக
சம்பியன்ஷிப் ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

உயிரிழக்கும் தருவாயில் ஜகதீஷ் லாட் , வறுமையால் வாடி வீட்டு வாடகைக்கூட
கொடுக்கமுடியாத நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக அந்நாட்டு
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com