செய்திகள்

‘கொரோனா’வால் மேலும் 54 பேர் பலி : நாட்டில் மேலும் 1,420 கொரோனா தொற்றாளர்கள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 54 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன (06/18) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 31 ஆண்களும், 23 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அதற்கமைய, இலங்கையில் இதுவரை 2,534 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் இதுவரை ஆயிரத்து 420 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 36 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 393 ஆக உயர்வடைந்துள்ளது.

Related Articles

Back to top button