உலகம்செய்திகள்

கொரோனாவின் இருவகை வைரஸ்கள், ஒரே தடவை தாக்கியதில் பெண் உயிரிழப்பு

கொரோனாவின் உருமாறிய இருவகை வைரஸ்கள் ஒரே தடவை தாக்கியதில் 90 வயதான பெல்ஜிய நாட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட அல்பாவும் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட பீட்டா வைரஸ் ஆகிய இரண்டு வைரஸ்கள் இப்பெண்ணை ஒரே தடவையில் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சம்பவம் மிகவும் அரிதாகவே இடம்பெற்றுள்ளதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். எவ்வாறாயினும் வெவ்வேறான வைரஸ்கள் நபர் ஒருவரை ஒரே தடவையில் பாதிக்க கூடுமென்பது இதன்மூலம் தெளிவாகின்றது. இதேவிதத்திலான செய்தியொன்று பிரேசிலில் பதிவாகியதுடன் அந்நாட்டில் இருவருக்கு இவ்வாறு இரு வைரஸ்கள் தாக்கியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button