உலகம்செய்திகள்

கொரோனாவின் கோர தாண்டவம் : தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தொடர்ந்தும் நீடிப்பு

தமிழகத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முடக்கம் தொடர்பில் தமிழக அரசினால் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய நாளை மறுதினம் அதிகாலை 04 மணி முதல் 20 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை அமுலாகும் வகையில் முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் 50 வீத பணியாளர்களை கொண்டு இயங்கவும் தனியார் பஸ்கள், மெட்ரோ ரயில்கள் என்பனவும் 50 வீதமானோரை மாத்திரம் கொண்டு பயணங்களை மேற்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உணவகங்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்திருந்து உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவிவரும் நிலையில் ஒரேநாள் பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதற்கமைய, தமிழகத்தில் இதுவரை 12 இலட்சத்துக்கு அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை, ஒரே நாளில் 144 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 14,612 பேராக உயர்வடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் வைத்தியசாலைகளில் 125,230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com