சினிமாசிறப்புசெய்திகள்

கொரோனாவுக்கு பலியான மற்றுமொரு நடிகர்.!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் திரையுலக பிரபலங்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றால் இயக்குனர் தாமிரா, கே.வி.ஆனந்த், நடிகர் பாண்டு, ஜோக்கர் துளசி என சிலர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில், பாஸ் என்ற பாஸ்கரன், குருவி, கில்லி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் மாறன் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நடிகர் மாறனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கடந்த இரு நாட்களுக்கு முன் செங்கல்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கொரோனா சிகிச்சை பலனின்றி நடிகர் மாறன் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா நேற்று மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றால் நடிகர் மாறன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com