சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று (13/1) பிற்பகல் 2 மணிக்கு
பாராளுமன்ற கூட்டம் நடைபெறவுள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில்
விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவுள்ள பிரேரணைகள் மற்றும் சபை ஒத்திவைப்பு
விவாதங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி
செய்யபட்டுள்ளமையால் அவர்கள் தொடர்பாக மேற்கொள்ளபடவுள்ள தீர்மானங்கள் தொடர்பாக
கலந்துரையாடவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ
தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலிற்கு மத்தியிலும் கூடப்படவுள்ள பாராளுமன்ற அமர்வு.
