செய்திகள்

கொரோனா தடுப்பூசி : தொண்டர் படையணி உருவாக்க தீர்மானம்

கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வதற்காக தொண்டர் படையணியை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயம் தொடர்பில் தௌிவுப்படுத்தியுள்ளார். முப்பது வருடங்களுக்கு முன்பிருந்தே தொண்டர் படையணியின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

தொண்டர் படையணியை மேலும் வலுவூட்டும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

நாட்டின் அனேகமான பகுதிகளில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் தொண்டர் படையணியின் ஒத்துழைப்பை அதற்கு பெற்றுக் கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button