உலகம்

கொரோனா திரிபுகளுக்கு நட்சத்திரக்கூட்டங்களின் பெயர்கள்

கொரோனா என்ற தனி பெயர் உருவாகி அது குறித்த புரிதலை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கு முன்னர்  அதன் திரிபுகள் பல்கிபெருகி அவற்றுக்கான பெயர் சூட்டுவதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா திரிபுகளுக்கு கிரேக்க எழுத்துக்களை கொண்டு பெயர்கள் சூட்டப்பட்டன.அல்பா,பீட்டா மற்றும் டெல்டா என 11 திரிபுகளுக்கு இதுவரை பெயரிடப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கிரேக்க எழுத்துக்கள் 24 உள்ள நிலையில் அதனையும் கடந்து திரிபுகள் பிற்வடையும் பட்சத்தில் பெயர் சூட்டுவதற்கு ஒரு முறைமை அவசியம் என்பதால் நட்சத்திரக்கூடடங்களின் பெயர்களை சூட்ட முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி டொக்டர் வென் கேர்க்கோவ் சர்வதேச இணைய சேவை ஒன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

வைக்கப்படும் பெயர்களினால் எவரும் புண்படாத வகையில் அமைய வேண்டும் என்பதை சுகாதார ஸ்தாபனம் உறுதி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
image download