செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்றுமுன்தினம் (10/07) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் இதுவரை 3,502 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

18 ஆண்களும், 17 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 5 பெண்களும், 5 ஆண்களும் மரணித்தனர். 60 வயதிற்கு மேற்பட்ட 13 பெண்களும், 12 ஆண்களும் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் இதுவரை 986 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 74 ஆயிரத்து 017 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 44 ஆயிரத்து 437 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button