செய்திகள்

கொரோனா தொற்றினால் இறந்தவரின் ஜனாஸாவை, தகனம் செய்ய காலி நீதிமன்றம் தடையுத்தரவு!

காலி, தெத்துகொட பகுதியில், கொரோனா காரணமாக உயிரிழந்த முஸ்லிம் நபர் ஒருவரின் ஜனாஸாவை, தகனம் செய்யாது, அதி குளிரூட்டியில் வைக்குமாறு காலி மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரன இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனா மரணம் என சட்ட வைத்திய அதிகாரியின் பரிந்துரைக்கப்பட்ட முஸ்லிம் நபர் ஒருவரின் ஜனாஸா தொடர்பில், தகனம் செய்யுமாறு, காலி மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரி உத்தரவிட்ட பின்னர், அதற்கு எதிராக உயிரிழந்த நபரின் உறவினர்கள் தாக்கல் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போதே மேலதிக நீதிவான் பவித்ரா சஞ்ஜீவனீ பத்திரண இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Related Articles

Back to top button
image download