செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கத்தை குணப்படுத்துமாறு இந்தியாவிடம் கோரிக்கை

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான சிங்கத்துக்கு சிகிச்சையளிக்க இந்தியாவின் உதவி கோரப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் இசினி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

11 வயதான ‘தோர்’ என்ற ஆண் சிங்கத்துக்கே நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

தற்போது இந்த சிங்கம் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதுடன், அதனுடன் இருந்த ஏனைய சிங்கங்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில், தோர் சிங்கத்துக்கு சிகிச்சையளிக்க இந்தியாவின் உதவியை இலங்கை அரசு நாடியுள்ளது.

Related Articles

Back to top button