நுவரெலியாமலையகம்

கொரோனா தொற்றுறுதியினால் ஹட்டன் மக்கள் வங்கிக்கு பூட்டு!

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஹட்டன் மக்கள் வங்கி காலவரையறையின்றி பூட்டப்பட்டுள்ளதாக மக்கள்; வங்கயின் முகாமையாளர் ஆர்.எம்.ஆர்.எம்.ரத்தநாயக்க தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை வங்கி ஊழியர்களுக்கு மேற்கொண்ட பிசிஆர் அறிக்கையினை தொடர்ந்தே இன்று முதல் பூட்டப்பட்டுள்ளது.

வங்கியில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனை தொடர்ந்து வ ங்கியில் கடமை புரியும் சிலர் சுகயீனமுற்றுள்ளனர்

அதனை தொடர்ந்து வங்கி ஊழியர்களுக்கு மேற்கொண்ட பீசிஆர் சோதனையின் போது 07 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்தே குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதில் வங்கி முகாமையாளருக்கு பிசிஆர் எடுத்த போதிலும் அவருக்கு தொற்று பரவில்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளமையும் என்பதும் இவர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டுள்ளார் என்பதும்; குறிப்பிடத்தக்கது.

இவ்வங்கியில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட ஏழு பேரும் முதலாம் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை வாடிக்கையாளர்களின் நலன் கருதி தன்னியக்க சேவைகளை முடிந்தளவு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்திருப்பததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுந்தரலிங்கம்

Related Articles

Back to top button


Thubinail image
Screen