ஆன்மீகம்

கொரோனா பாதிப்பிலிருந்து நாட்டை மீட்டெடுக்க கோல்புறூக்கில் விசேட வழிபாடு ..

எமது நாட்டின் கொரோனா தொற்று காரணமாக 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல இடங்கள் முடக்கப்பட்டுள்ளது.

நாட்டை மீட்டெடுக்கும் வகையில் சிவன் அருள் இல்லத்தின் தலைவர் வைத்தியர் ஜெயேந்திரன் நமசிவாயம் வேண்டுகோளுக்கிணங்க அக்கரப்பத்தனை கோல்புறூக் இந்து ஆலயம் பௌத்த விகாரையிலும்,விசேட வழிபாடு இடம்பெற்றது.

இதற்கான ஏற்பாட்டினை 475 ஜே கிராம சேவகர் பிரிவு உத்தியோகத்தர். ஆர் குழந்தைவேல் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இதற்கான சகல ஒழுங்குகளையும் மலையக சமூக அபிவிருத்தி பேரவையின் ஒருங்கிணைப்பில் நிகழ்வுகள் அனைத்தும் இடம்பெற்றது.

இதன்போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றிய வகையில் சிலருக்கும் ஆசி வேண்டி சர்வமத பிரார்த்தனை களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .

படங்கள் அக்கரப்பத்தனை ‌நிருபர்

Related Articles

Back to top button
image download