செய்திகள்

கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் பொய் பிரசாரங்களை மேற்கொள்வதை தவிர்க்குமாறு கோரிக்கை …

கொரோனா மரணங்கள் தொடர்பில் சமூக வலைதளங்களில் பொய் பிரசாரங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறு சுகாதார தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் இறுதி கிரியைகள் மேற்கொள்ளப்படும் விதம் தொடர்பில் அரசியல்வாதிகள் மற்றும் சில இணையதளங்கள் போலி பிரசாரங்களை மேற்கொள்வதாக அறிக்கையொன்றினூடாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ள அறிக்கைகளின் பிரகாரம், கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் அனைவரின் சடலங்களும் தகனம் செய்யப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அரசியல் இலாபத்திற்காக , சுகாதார அமைச்சின் கொள்கைகளை திரிபுபடுத்தி போலி செய்திகளை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Articles

Back to top button