செய்திகள்

கொரோனா மரணம் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 41 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (12/07) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையில் இதுவரை 3,574 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

23 ஆண்களும், 18 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் இதுவரை 1,404 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 76 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 47 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button