உலகம்சினிமாசெய்திகள்

கொரோனா மற்றுமொரு நடிகரையும் காவு கொண்டது…. நடிகர் பாண்டு காலமானார்! திரையுலகினர் அதிர்ச்சி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் பாண்டு (74) இன்று காலமானார். தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு, ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ படத்தின் மூலம திரையுலகில் அறிமுகமானார்.

நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவர், ‘சின்னத் தம்பி’, ‘திருமதி பழனிசாமி’, ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘காதல் கோட்டை’, ‘ஏழையின் சிரிப்பில்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையிலேயே இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பாண்டு உயிரிழந்துள்ளார். அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவரகளின் கண்காணிப்பில் உள்ளார்.

இவர், பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார். அதிமுக கட்சியின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டுவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com