Breaking Newsசெய்திகள்

நாளொன்றில் உச்சத்தை தொட்ட கொரோனா

இலங்கையில் முதல் முறையாக நாளொன்றில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 3000ஐக் கடந்துள்ளது. இன்று இதுவரையான காலப்பகுதியில், 3051 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதற்கமைய, இலங்கையில் 150,771பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,222 பேர் இன்று (19) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,367 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இவர்களில் 1,015 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com