Breaking Newsசெய்திகள்

இடையில் இனி தளர்வு இல்லை : பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7 மாதம் அதிகாலை 4 மணி வரை நீக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு எதிர்வரும் 31ஆம் திகதி மற்றும் ஜீன் 4ஆம் திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாது என இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கொரோனா தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மிக வேகமாக பரவிவரும் கொவிட் 19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாக இந்த தீர்மானத்தை அரசாங்கம் இன்று எடுத்துள்ளது.

அத்தியவசிய பொருட்களை வீடுகளுக்கே விநியோகிக்க மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com