செய்திகள்

கொரோனா வைரஸினால் நேற்றையதினத்தில் 103 பேர் பலி ..?

கொரோனா வைரஸினால் நேற்றையதினத்தில் 103 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாகப் பதிவாகியுள்ளது.

ஹூபேய் மாகாணத்திலேயே இந்த உயிரிழப்புக்கள் அனைத்தும் பதிவாகியுள்ளன.

இருப்பினும் புதிதாகத் தொற்றுக்குள்ளாபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் 2,618 பேர் புதிதாக தொற்றுக்குள்ளாகியதாக அடையாளங்காணப்பட்ட நிலையில். நேற்றைய தினத்தில் 2,097 பேரே புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

42,200 பேர் சீனாவில் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பீஜிங்கில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலைக்கு அந்நாட்டு ஜனாதிபதி ஸி ஜின்பிங் விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது தொற்றுக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள், தாதியர்களையும் ஜனாதிபதி சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டிய தீர்க்கமான, மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அங்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button
image download