உலகம்செய்திகள்

கொரோனா வைரஸின் ஆரம்பம் : அவுஸ்ரேலியாவுடனான பேச்சுவார்த்தைகளை காலவரையறையின்றி ஒத்திவைத்தது சீனா

அவுஸ்ரேலியாவுடனான முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை சீனா காலவரையறையின்றி ஒத்திவைத்துள்ளது. இருநாடுகளுக்குமிடையில் அதிகரித்துவரும் இராஜதந்திர பிணக்குகளில், பிந்தியதாக இது அமைந்துள்ளது.

கொரோனா வைரஸின் ஆரம்பம் தொடர்பான விசாரணைகளை அவுஸ்ரேலியா கோரியதுடன், 5G வலையமைப்பை நிறுவுவதற்கு ஹுவாவி நிறுவனத்துக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து இருநாடுகளுக்குமிடையிலான உறவுகள் விரிசலடைந்துள்ளன.

திராட்சைப்பழ இரசம் மற்றும் மாட்டிறைச்சி உள்ளிட்ட அவுஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களுக்கு சீனா கடந்த ஆண்டு தடைவிதித்தது.

இந்நிலையில் சீன அரசாங்கத்தின் ஆணைக்குழுவொன்று இன்று வௌியிட்ட அறிக்கையில், அவுஸ்ரேலியா குளிர்கால மோதல் மனப்பாங்குடன் உள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியா அரசாங்கம் ஆரம்பித்துள்ள சில நடவடிக்கைகள், இருநாடுகளுக்குமிடையிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்களை பாதிப்பதாகவும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சீனாவின் இந்தத் தீர்மானம் ஏமாற்றமளிப்பதாக அவுஸ்ரேலிய வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com