உலகம்

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து இரண்டாம் கட்ட சோதனை

கொரோனா வைரஸின் தோற்றம் குறித்து இரண்டாம் கட்ட சோதனைக்கு உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை ஒன்றை முன்வைத்துள்ளது.

ஆனாலும் சர்வதேச விசாரணைக்கு சீனா ஒப்புதல் அளிக்கும் என்பதற்கான எந்த ஒரு சமிக்ஞையும் தென்படவில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்கத்துவ நாடுகளுடன் உள்ளக சந்திப்பொன்றை உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரொஸ் கெப்ரேயஸஸ் நடத்தியுள்ளார்.

சீனாவில் முதலில் பரவியதை அடுத்து ஆரம்ப கட்ட தரவுகள் கிடைக்காமையே பிரச்சனை நீடித்தமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

வேறு ஒரு விலங்கு மூலம் வெளவாலுக்கு பரவியிருக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபன தலைமையிலான ஆய்வுக்குழு வூஹானில் நடத்தப்பட்ட நான்கு வார சோதனையில் தெரியவந்துள்ளது.

ஆனாலும் அமெரிக்கா உட்பட மேலும் சில சர்வதேச நாடுகளின் விஞ்ஞானிகள் விரிவான விசாரணைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வு நிலையத்தில் வெளவால்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அடுத்தகட்ட விசாரணைக்கு ஜெனீவாவில் உள்ள சீன அலுவலகம் இதுவரை எந்த வித பதிலும் அளிக்கவில்லை.

தொற்று பரவ ஆரம்பிக்க முன்னரும் அதன் பின்னருமான நிலைமை குறித்த தரவுகளை நேரடியாக வழங்க வேண்டும் என சர்வதேச விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

Related Articles

Back to top button