உலகம்

கொலம்பியாவில் ஊரடங்கு சட்டம்.

கொலம்பிய தலைநகர் பொகொட்டாவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் ஓய்வுதியம் உள்ளிட்ட சில நிதித் திட்டங்கள் நிறுத்தப்பட்டமைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் , மாணவர்கள் என பல தரப்பினரும் நாடளாவிய ரீதியில்  ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணியில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், பதற்ற நிலைமையை தணிக்கும் நோக்கில் தேசிய ரீதியலான கலந்துரையாடல் ஒன்றை அடுத்த வாரம் நடத்த எதிர்பார்த்துள்ளதாக கொலம்பிய ஜனாதிபதி ஐவன் டியூக் கூறியுள்ளார்.

Related Articles

Back to top button