...
விளையாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் சன்ரைஸஸ் ஐதரபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன்ரைஸஸ் ஐதரபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைஸஸ் ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் 116 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றியிலக்கை அடைந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சுப்மன் கில் 57 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த நிலையில் போட்டியின் சிறப்பாட்டக்காரராகத் தெரிவானார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen