செய்திகள்

கொழுப்பில் குறைவடைந்து வரும் கொரோனா தொற்று..

நாட்டில் நேற்று முன்தினம் (21) 370 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக
covid-19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு பதிவானவர்களுள் 101 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

நேற்று முன்தினம் (21) 17 மாவட்டங்களில் கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
13,806 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டத்தில் பதிவான 101 பேருள் 43 பேர் ரத்மலானை பகுதியைச்
சேர்ந்தவர்கள். கொரோனா வைரஸ் தொற்று அதிகளவில் பதிவாகிய கொழும்பு
மாவட்டத்தில், தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் நேற்று
முன்தினம் (21) குறைந்தளவிலான கொவிட் தொற்றாளர்களே இனங் காணப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கொம்பனித் தெருவில் 3 பேர், கிருலப்பனையில் 3 பேர், பொரல்லையில் 6
பேர், தெமட்டகொடையில் 3 பேர், மருதானையில் ஒருவர், புதுக்கடையில் 2 பேர்,
ப்ளூமெண்டல் 5 பேர், கிரேன்ட்பாஸில் 6 பேர், மட்டக்குளியில 4 பேர், அங்கொடயில்
2 பேர், அத்திடிய 2 பேர், அவிசாவலையில் 3 பேர், ஹோமாகமயில் ஒருவர், கடுவலையில்
ஒருவர், மொரட்டுவையில் 2 பேர், பாதுகையில் ஒருவர், புவக்பிடியவில் ஒருவர்,
பன்னிப்பிட்டியவில் 3 பேர், ரணலயில் ஒருவர், சாலமுல்லயில் 7 பேர் மற்றும்
ரத்மலானையில் 43 பேரும் நேற்று முன்தினம் (21) கொவிட் தொற்றாளர்களாக
இனங்காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலும் 67 தொற்றாளர்கள் நேற்று முன்தினம் (21)
பதிவாகியுள்ளனர். அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் 46 பேரும், கண்டி
மாவட்டத்தில் 25 பேர், காலி மாவட்டத்தில் 12 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஒருவர், அம்பாரை மாவட்டத்தில் 23 பேர், குருநாகல் மாவட்டத்தில் 26 பேர்,
இரத்தினபுரி மாவட்டத்தில் 35 பேர், கேகாலை மாவட்டத்தில் 6 பேர், யாழ்ப்பாண
மாவட்டத்தில் 3 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 2 பேர், அம்பாந்தோட்டை
மாவட்டத்தில் ஒருவர், மாத்தளை மாவட்டத்தில் 3 பேர், அனுராதபுர மாவட்டத்தில் 6
பேர் மற்றும் வெளி நாட்டில் இருந்து வருகை தந்தவர்களுள் 6 பேரும் நேற்று
முன்தினம் (21) கொவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related Articles

Back to top button