செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு வரை நீர் விநியோகம் தடை ?

கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று நள்ளிரவு வரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

நீர் விநியோகிக்கும் பிரதான குழாய் கட்டமைப்பில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக இன்று
நள்ளிரவு வரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை – தெரிவித்துள்ளது.

மாளிகாவத்த, மாளிகாகந்த, மருதானை, கோட்டை, புறக்கோட்டை, டீ.ஆர் விஜயவர்தன மாவத்தை, சிற்றம்பலம் கார்டினர் மாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு 12 மற்றும் கொழும்பு 13 ஆகிய பகுதிகளுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பத்லேயிலிருந்து மாளிகாகந்த வரை நீரை விநியோகிக்கும் பிரதான நீர்குழாயில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button
image download