செய்திகள்

கொழும்பிலிருந்து சென்ற 3 சொகுசு பஸ்கள் சிக்கின: 49 பேரில் மூவருக்கு கொரோனா.!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை நடைமுறையில் உள்ள நிலையில், அதனை மீறி கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற 3 சொகுசு பஸ்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டிஎம்ஏ சமரகோன் தெரிவித்தார்.

இன்று அதிகாலை தும்பாலஞ்சோலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே மேற்படி பஸ்ஸானது பிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது பஸ்ஸில் பயணித்த 49 பேரும் அன்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது மூவருக்கு கொவிட் 19 தொற்று காணப்பட்டதாக ஏறாவூர் பற்று பிரதேச சுகாதார வைத்தியதிகாரி இ.சிறிநாத் தெரிவித்தார். இந்த பஸ்கள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பிலிருந்து 04 மாகாணங்களைக் கடந்து கொழும்புக்குக்குச் சென்று திரும்பிவரும் வழியில் பாதுகாப்புத் தரப்பினரால் சோதனையிடப்பட்டபோது அவர்களிடம் விசேட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பாதை அனுமதியோ இருக்கவில்லையென தெரியவந்துள்ளது.

இந்த பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட பயணிகள் கரடியனாறு கொவிட் சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த பஸ் வண்டியிலிருந்த ஏனைய பயணிகள் அன்டிஜன் பரிசோதனையினையடுத்து வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதேவேளை, வைபவங்கள் மற்றும் நபர்கள் ஒன்று கூடுவது தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் வலியுறுத்துகின்றனர். திருமண பதிவுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் அதில் 10 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும்.

Related Articles

Back to top button