செய்திகள்

கொழும்பிலிருந்து லண்டன் நோக்கி பயணிக்கும் விமானங்களின் பயணப்பாதைகளில் மாற்றம்..

கொழும்பிலிருந்து லண்டன் நோக்கி பயணிக்கும் விமானங்களின் பயணப்பாதைகளை ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் மாற்றியுள்ளது.

ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் ஈராக்கின் வான்பரப்புகளை தவிர்த்து பயணிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான பதற்ற நிலையை அவதானித்து வருவதாகவும், இதன் பிரகாரம் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்திலான அதிகாரிகளிகளுடன் கலந்துரையாடி,பயணிகளினதும் ஊழியர்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button