சமூகம்

கொழும்பில் அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை

கொழும்பில் இன்று எந்தவொரு அசம்பாவிதங்களும் இடம்பெறுவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பொலிஸ் மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அசம்பாவிதங்களும் இடம்பெறுவதை தடுப்பதற்கு வகையில் பொலிஸ் மா அதிபர் இந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com