உலகம்செய்திகள்

கொழும்பில் ஆரம்பமானது நீதிதுறை அதிகாரிகளின் மாநாடு..

பொதுநலவாய ஒன்றியத்தின் நீதி அமைச்சர்களின் நீதிதுறை அதிகாரிகளின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன் ஆகியோர் தலைமையில் இந்த மகாநாடு ஆரம்பமானது.

இந்த மாநாடு எதிர்வரும் 8 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொதுநலவாய ஒன்றியத்தின் செயலாளர் நேற்று மாலை இலங்கைக்கு வருகை தந்தார்.

பொது நலவாய நாடுகள் மத்தியில் நிலவும் சட்ட சட்டமைப்பு மற்றும் சட்டம் தொடர்பிலான அறிவை பரிமாறுதல், நீதிமன்ற வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சட்ட ரீதியிலான ஒத்துழைப்பு, சிவில் சட்ட கட்டமைப்பு மற்றும் ஊழலை இல்லாதொழித்தல் ஆகிய விடயங்கள் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளன.

இதற்கு மேலதிகமாக சட்ட கட்டமைப்பை ஒழுங்குறுத்துதல் உள்ளிட்ட பிராந்திய நாடுகள் மத்தியில் சட்டவாட்சி புரிந்துணர்வுடன் செயற்படுதல் தொடர்பாக இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
image download