செய்திகள்

கொழும்பில் இருந்து ஷாங்காய் விமான சேவைகள் இரு வாரங்களுக்கு இடைநிறுத்தம்!!


கொழும்பில் இருந்து ஷாங்காய் செல்லும் சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸின் விமான சேவைகள் ஜூலை 26 முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.ஜூலை 6 ஆம் திகதி கொழும்பிலிருந்து தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்திற்கு சென்ற MU714 என்ற விமானத்தில் சென்ற ஆறு பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கொழும்பு-ஷாங்காய் விமான சேவைகள் இடைநிறுத்தப்படும் அதே நேரத்தில் கொழும்பு-குன்மிங் விமான சேவைகளும் அடுத்த வாரம் முதல் இரத்து செய்யப்படும் என அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button