...
செய்திகள்

கொழும்பில் உணவகம் ஒன்றில் அதிகாலை வெடிப்புச் சம்பவம்…

கொழும்பு, ரீட் மாவத்தையில் உள்ள பழைய குதிரைப் பந்தய திடல் கேட்போர் கூடத்தில் உள்ள கட்டமொன்றில் இன்று (20) அதிகாலை வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 
கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, குறித்த கட்டடத்தின் கீழ் மாடியில் உள்ள சர்வதேச உணவு தயாரிக்கும் நிறுவனமொன்றின் ஹோட்டலிலேயே இவ்வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இவ்வெடிப்புச் சம்பவத்திற்கு சமையல் எரிவாயுக் கசிவு இடம்பெற்றிருக்கலாம் என தற்போது வரை சந்தேகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவு மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த வெடிப்புச் சம்பவம் காரணமாக ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்வெடிப்புச் சம்பவம் மற்றும் தீ காரணமாக இதுவரை எவருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

Related Articles

Back to top button


Thubinail image
Screen