சமூகம்

கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்: பாதுகாப்பு நடவடிககையில் 2000 பொலிஸார்

“ஜனநாயகத்தை பாதுகாப்போம் ஏகாதிபத்தியத்தை தோற்கடிப்போம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை கொழும்பில் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் எனவும் அரசியல் அமைப்பு எதிராக செயற்பட வேண்டாம் எனவும் இதன்போது கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்னால் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆர்ப்பாட்டப் பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ப்படுகின்றது.

அத்துடன், அலரிமாளிகையை சுற்றியுள்ள பகுதி மற்றும் அதற்குள்ளும் மக்கள் நிறைந்து காணப்படுவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்து.

கடந்த 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச புதிய பிரதமராக ஜனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து நாட்டின் அரசியலில் திடீர் நெருக்கடி நிலைமை தோன்றியுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் இன்றைய தினம் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன், அலரி மாளிகையை நோக்கி பெருந்திரளான மக்கள் நகரந்துள்ளனர்.

கொழும்பின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 2000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் 600 போக்குவரத்துப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதைவிட 10 விசேட அதிரடிப்படையின் குழுக்களும் கடமையில் ஈடுபடுத்தப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்பில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க கொழும்பு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் அமெரிக்க நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Related Articles

36 Comments

Leave a Reply

Your email address will not be published.

Back to top button