செய்திகள்
கொழும்பில் கடும் காற்றுடன் மழை -பல இடங்களில் சேதம்
கொழும்பில் கடும் காற்றுடன் கடும் மழை பெய்துகொண்டிருக்கிறது.இந்த நிலையில் சில பகுதிகளில் மின்சாரம் இன்றி இருளடைந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரம் பாதையோரங்களில் உள்ள சில மரங்கள் முறிந்து விழுந்துள்ள நிலையில் விளம்பர கம்பங்களும் சாய்ந்துள்ளன. கொள்ளுப்பிட்டி பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது . பாதைகளில் பயணிக்கும் பயணிகள், வாகன சாரதிகள் அவதானம்.