செய்திகள்
கொழும்பில் கட்டிடம் ஒன்றில் திடீர் தீ பரவல்

கொழும்பு, பேபுரூக் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடம் ஒன்றில் சற்றுமுன்னர் பாரிய தீ பரவியுள்ளது.
தீயணைப்பு நடவடிக்கையில் கொழும்பு தீயணைப்பு பிரிவு, பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீப்பரவலுக்கான காரணம் இது வரையில் வெளிவராத நிலையில் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.