சமூகம்
கொழும்பில் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை: மக்கள் அவதானத்திற்கு

நாளை காலை 8.00 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 5.00 மணி வரையான 21 மணித்தியால காலப்பகுதியில் கொழும்பில் பல பகுதிகளில் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப் பணி காரணமாக மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிப்பிட்டி மற்றும் ருக்மல்கம ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுலாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெலென்வத்தை, மத்தெகொடை, ஹோமாகமை, மீபே மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேசங்களிலும் நீர்விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.