செய்திகள்

கொழும்பில் சில வீதிகள் 20 வரை மூடு

கொழும்பின் சில பகுதிகளில் நிலத்தடி நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இப்பாவத்தை சந்திவரையிலான பாதையின் போக்குவரத்து இன்று காலை 9 மணி தொடக்கம் 20 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் ஹெட்டியாவத்தை சந்தியில் இருந்து இக்பா வத்தை சந்தி வரையிலும், கொட்டாஞ்சேனை சுற்றுவட்டம் 200 மீட்டர் வரையிலான பகுதி, மட்டக்குளி பாம் வீதி பிரதேசத்தின் 110 மீட்டர் வரையினான பகுதி இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button