செய்திகள்
கொழும்பில் நாளை நீர்வெட்டு.!
கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளில் நாளை 18 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி நாளை காலை 8 மணி முதல் நாளைமறுநாள் அதிகாலை 2 மணி வரையில்
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, ஸ்ரீஜயவர்தனபுர, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொடிகாவத்த, முல்லேரியா, கொலன்னாவ, இரத்மலானை உட்பட சொய்சாபுர குடியிருப்பு பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. ஆகவே பொதுமக்கள் நீரை தேக்கி வைத்துக்கொள்ளுமாறு நீர் வழங்கல் மற்றும் வடி காலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
செய்தி மூலம் .வீரகேசரி இணையத்தளம்