கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் : மலையக மக்களுக்கு தீர்வு கிடைக்குமா?
பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1000 ரூபாவாக உயர்த்த கோரி மலையகத்தில் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், கொழும்பு வாழ் மலையக உறவுகள் அனைவரும் நேற்று கொழும்பு காலி முகத்திடத்தில் ஒன்றுகூடி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
அத்துடன், இன்றும் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர் ,யுவதிகள் பல பகுதிகளில்,போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
ஆனால் முதலாதளிமார் சம்மேளனம் அடிப்படை சம்பள்ம் 600ரூபாவாக தீர்மானித்துள்ளது.
இதேவேளை, தங்களின் உறவுகளுக்கு ஆதரவு வழங்கி பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 1000ரூபாவாக உயர்த்தப்பட வேண்டும் அவர்களுக்கு முழுயான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும், கொழும்பு வாழ் மலையக உறவுகள் அனைவரும் மற்றும் இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.