செய்திகள்

கொழும்பில் 21 மணி நேர நீர்வெட்டு

கொழும்பில் பல பகுதிகளில் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 21 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்பிரகாரம் கொழும்பு 1, 2, 3, 7, 8, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் ஞாயிறு காலை 6.00 மணி வரை 21 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதேவேளை கொழும்பு 04 மற்றும் 12இல் வசிப்பவர்களுக்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை மேலும் தெரிவிக்கிறது.

Related Articles

Back to top button