செய்திகள்

கொழும்பு அவிசாவளை- புவக்பிட்டி அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில் 

அருள் தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் தாயே
அறங்காத்து நலமளிக்க வரவேண்டும் அம்மா 
கொழும்பு மாவட்டத்தில் உறைகின்ற தாயே
செழுமைமிகு வாழ்வினையே தரவேண்டும் அம்மா 
புவக்பிட்டியில் கோயில் கொண்ட பேரருளே தாயே
புவனமெங்கும் காவல் செய்ய வரவேண்டும் அம்மா 
மாசற்ற அன்பு கொண்டு அருளுகின்ற தாயே
மாண்புமிகு வாழ்வினை நீ தரவேண்டும் அம்மா 
அவிசாவளை நகரருகே உறைகின்ற தாயே 
அறிவருவி பெருக்கியெமக்கருள வேண்டும் அம்மா 
அச்சமகற்றி எமக்கருளுகின்ற தாயே 
வளங்கொண்ட எதிர்காலம் தரவேண்டும் அம்மா 
எங்கும் நிறைந்து அருளுகின்ற தாயே
ஏற்றமிகு நல்வாழ்வைத் தரவேண்டும் அம்மா
துன்பங்கள் போக்கித் துணையிருக்கும் தாயே
வளங்கொண்டு வாழ நல்வழி தரவேண்டும் அம்மா 
அல்லல் களைந்து அமைதி தரும் தாயே
வல்லமை தந்துயர்த்த வரவேண்டும் அம்மா 
ஆதரித்து அரவணைத்து அருளுகின்ற தாயே 
நிம்மதியாய் வாழ வழி தரவேண்டும் அம்மா. 
செம்மை தரும் நல்வாழ்வு அருளுகின்ற தாயே 
சீர்மைமிகு வாழ்வினையே தரவேண்டும் அம்மா 
கேட்ட வரம் தந்தருளும் தூயவளே தாயே 
நத்தியுந்தன் அடிபணியும் எங்களுடனிருக்க வரவேண்டும் அம்மா. 
ஆக்கம்- த மனோகரன். 
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Related Articles

Back to top button