செய்திகள்

கொழும்பு – காக்கைதீவு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்

முகம் துணியொன்றினால் மறைத்து கட்டப்பட்டும், கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும்  அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று, கொழும்பு – 15 மட்டக்குளி – காக்கை தீவு கடற் கரையில் ஒதுங்கியுள்ள நிலையில் அது தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 மட்டக்குளி பொலிசார் ஊடாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரமவுக்கும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிவான் நீதிமன்ற விசாரணைகளும் இடம்பெற்றுள்ளது.

 நீல நிற டெனிம் காற்சட்டை மற்றும் வெள்ளை நிற ரீ சேர்ட் அணிந்த நிலையில் காணப்படும் குறித்த அடையாளம் தெரியாத சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்துள்ள நபரை அடையாளம் காணவும், குறித்த ச்மபவம் குற்றச் செயல் ஒன்றின் பிரதிபலனாக இருக்கும் என சந்தேகிக்கபப்டும் நிலையில் அதனை வெளிப்படுத்திக்கொள்ளவும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

Related Articles

Back to top button